ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்றவம் 7ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாதம் பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையடுத்து 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். 48 அடி உயரமும் 21 அகலமும் கொண்ட இத்தேரானது வண்ண மலர்கள் மற்றும் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக காட்சியளித்தது. இந்த தேரில் வீரராகப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவள்ளூர் நகரின் முக்கிய மாட வீதிகளான குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜா வீதி, மோதிலால் தெரு வழியாக தேரோட்டம் நடைபெற்றது. திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் மிளகு உப்பு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது செலுத்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இழுத்து தேரோட்டம் நடைபெறுவதால் தேரை வடம் பிடித்து கைகளால் இழுத்து வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விழாவிற்கு நான் ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: