வணிகர்கள் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கடந்த 10-10-2023 அன்று சட்டசபை கூட்டத்தில் 110 விதியின்கீழ் அறிவித்த வாட் வரி சமாதான திட்டம் அரசுக்கும் வணிகர்களுக்கும் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. ஆனால், 50 ஆயிரத்திற்கும் குறைவான வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதுவரையில் சமாதான திட்டத்தில் 33 கோடி மட்டுமே அரசுக்கு வரி வருவாயாக கிடைத்துள்ளது. இன்னும் 24 ஆயிரத்து 200 கோடி ரூ.பாய் நிலுவையில் உள்ளது.

இத்திட்டத்தை வெற்றிபெறச்செய்ய போதிய அவகாசம் வணிகர்களுக்கு தேவை என்பதையே இது பிரதிபலிக்கிறது. வாட் சமாதான திட்டத்தில் விடுபட்ட வணிகர்களை சேர்த்திடவும், ஒரு ஆண்டு கால அவகாசம் அளிக்கவும் வலியுறுத்தி, வணிகவரித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மனு தரப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், பிப்.15ல் முடியும் இச்சமாதான திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும், வணிகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவரவும் வேண்டுகிறோம் என கூறியுள்ளோம்.

The post வணிகர்கள் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: