மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம்; ‘இவிஎம்’ இயந்திரங்களில் ‘ஓஎஸ்’ உள்ளதா?: தேர்தல் ஆணையம் மீண்டும் விளக்கம்

புதுடெல்லி:‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘ஓஎஸ்’ என்ற வசதி கிடையாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘இவிஎம்’ இயந்திரங்களின் ெசயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் தெரிவிக்கின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும், இதனால் தேர்தல் முடிவுகள் முறைகேடு செய்யப்படுவதாகவும் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையம், அவ்வப்போது பதில் அளித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்தது. அதில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இயங்குதளம் (ஓஎஸ்) என்ற ஒன்று இல்லை.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா, பூடான் போன்ற நாடுகளில் வாக்கு சீட்டு முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் இவிஎம் வாக்குப்பதிவு முறையானது சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்ற விளக்கங்களுடன் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் எப்படி வாக்குப்பெட்டியில் பதிவாகி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக கேள்விகள் மற்றும் பதில்களை, இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் புதுப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம்; ‘இவிஎம்’ இயந்திரங்களில் ‘ஓஎஸ்’ உள்ளதா?: தேர்தல் ஆணையம் மீண்டும் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: