மேட்டூர் அணையில் தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு

சேலம்: மேட்டூர் அணையில் இன்று காலை தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் ப்ரிந்தா தேவி ஆகியோர் நீர் வளத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து மேட்டூர் அணையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் வலது கரை, இடது கரை, மேல் மதகுகள் மற்றும் கீழ் மதகுகள் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் அணையின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார். மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டுதல் தலைமை செயலாளருக்கு இது குறித்து தெளிவாக விளக்கமளித்தனர். மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கு, 16 கண் பாலத்த்தில் மின் விசை மூலமும் மனித விசை மூலமும் மதகுகள் ஏற்றியும் இறக்கியும் சோதனை மேற்கொள்ளபட்டது.

இதில் அணையின் தண்மை பற்றியும், நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், அணையின் உறுதி தண்மை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வானது காலை 7.30 மணியளவில் தொடங்கு 9 மணியளவில் முடிவடைந்தது.

The post மேட்டூர் அணையில் தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: