குத்தாலம் ஆலங்குடி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு

 

குத்தாலம்,பிப்.8: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் 2021-22 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15‌‌.00 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய நியாய விலைக் கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் உமாசங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் ராமதாஸ், துணைத் தலைவர் புனிதா மாதவன் முன்னிலை வகித்தார். ஆலங்குடி ஊராட்சி தலைவர் கவிதா வைத்தியநாதன் வரவேற்றார்.

சிறப்பாக அழைப்பாளராக மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு ரிப்பன்வெட்டி,குத்து விளக்கு ஏற்றி வைத்து நியாய விலை கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வைத்தியநாதன், குத்தாலம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்புகென்னடி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சங்கர், ராஜா, வடவீரபாண்டியன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவானந்தம், முருகமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமிசங்கர், விஏஓ மாதவன், தென்னரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சக்திவேல் நன்றி கூறினார். குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post குத்தாலம் ஆலங்குடி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: