லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

 

ஈரோடு, பிப்.7: ஈரோடு அடுத்த சித்தோடு அரசு மருத்துவமனை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அங்கு சென்ற சித்தோடு போலீசார், அப்பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த சித்தோடு நடுப்பாளையம் கோபால் சாமி கோயில் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (54), விளையாட்டு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (70) ஆகிய 2 பேரையும் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 2 செல்போன், 5 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பவானி கூடுதுறை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக ஈரோடு மேட்டுநாசுவன்பாளையம் கந்தசாமி மேஸ்திரி வீதியை சேர்ந்த கண்ணன்(50) என்பவரை பவானி போலீசார் கைது செய்து, 2 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். வயல்வெளிகளுக்கு மத்தியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 7 மீட்டர் அகலமும், 8.2 கி.மீ. தொலைவும் கொண்ட இந்த சாலையில் தண்ணீர் கடந்து செல்லும் வகையில் 54 சிறு பாலங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

The post லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: