நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறு!: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 22 தொகுதிகளை கேட்கும் அமமுக..!!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக – அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.

மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் முன்களப் பணிகளை பாஜக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக-அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அமமுக போட்டியிட விருப்பமான தொகுதிகளின் பட்டியலை பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவிடம் 22 தொகுதிகளை கேட்கும் அமமுக:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக 22 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரக்கோணம், ஆரணி தொகுதிகளில் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. தென்சென்னை, வடசென்னை, சேலம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளையும் ஒதுக்குமாறு பாஜகவிடம் அமமுக பட்டியல் அளித்துள்ளது.

இதேபோல், திருப்பூர், சிதம்பரம், தென்காசி, திருவண்ணாமலை தொகுதிகளையும் பாஜகவிடம் அமமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், நெல்லை தொகுதிகளிலும் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறு!: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 22 தொகுதிகளை கேட்கும் அமமுக..!! appeared first on Dinakaran.

Related Stories: