திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்; பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது..!!

தூத்துக்குடி: மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து குழு கருத்து கேட்கிறது. 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கும் சூழலில் திமுகவின் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கும் நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பயணத்தை தொடங்கியது. முதற்கட்டமாக தூத்துக்குடி தொகுதியில் இருந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பயணத்தை தொடங்கி உள்ளது.

நாளை கன்னியாகுமரியிலும் பிப்.7ல் மதுரையிலும், பிப். 8ல் தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிப்.9ல் சேலத்திலும், பிப். 10ல் கோவையிலும் பிப்.11ல் திருப்பூரிலும் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் நடத்தவுள்ளது. தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க உள்ளது. முதல் நாளான இன்று திமுக தேர்தல் அறிக்கைக் குழு தூத்துக்குடியில் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்கிறது. தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கி சென்னையில் பிப்ரவரி 23ம் தேதி நிறைவு செய்கிறது.

The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்; பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: