நாடாளுமன்ற தேர்தல்: சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

சென்னை: சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கான தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். தமிழகத்தை பொறுத்தவரை நாடளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஏற்கனவே தொடங்கி அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு கட்சியான பாஜக, தற்போது தங்களது தலைமை தேர்தல் அலுவலகத்தை சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் திறந்துள்ளது.

சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். தென் சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழுவதுமாக நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகத்தில் தான் பாஜக சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல்: சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!! appeared first on Dinakaran.

Related Stories: