பாஜவின் துணை நிறுவனங்களாக செயல்படும் ஐடி, ஈடி, சிபிஐ: கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவை ஒன்றிய பாஜ அரசின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டாக எதிர்க்கட்சி தலைவர்களையே குறிவைத்து அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதில் இருந்தே இந்த நிறுவனங்கள் சுதந்திரமானவை கிடையாது என்று ஆதாரப்பூர்வமாக கூறமுடிகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து மட்டுமல்ல வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றையும் எதிர்த்து போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. பாஜ ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் ஆகியன அழிவின் பாதையில் இருக்கிறது’ என்றார்.

The post பாஜவின் துணை நிறுவனங்களாக செயல்படும் ஐடி, ஈடி, சிபிஐ: கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: