காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடக்கி வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று காணியம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்தது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தொடக்கி வைத்தார்.

இதில், கோழி, ஆடு, மாடு என சுமார் 200க்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் ஊக்க பரிசுகள் வழங்கினர்.இந்த முகாமில் கால்நடை மருத்துவர் கனகமணி, உதவியாளர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் மாதவி தன்சிங், மோகன், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: