ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னையில் இயற்கை சந்தை இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர்சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக இன்றும் நாளையும் சென்னையில் இயற்கை சந்தை நடக்கிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்தப்பட உள்ளது.

அதன்படி, இந்த மாத இயற்கை சந்தை இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசி, சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். மேலும் இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னையில் இயற்கை சந்தை இன்றும், நாளையும் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: