ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம், பிப். 2: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான இடையகோட்டை, கள்ளிமந்தையம், ஸ்ரீராமபுரம், புதுச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாட்சி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காயை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

இங்கு விளையும் வெண்டைக்காய்கள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது மார்க்கெட்டில் வெண்டைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் கடந்த மாதங்களில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்ற வெண்டை தற்போது ஒரு கிலோ ரூ.27 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: