அண்ணாமலை பாதயாத்திரைக்கு லோடு வேனில் அழைத்து வரப்பட்ட ஆட்கள் திருவண்ணாமலையில் ஆபத்தான முறையில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலை பாதயாத்திரைக்காக பாஜ நிர்வாகிகள் போக்குவரத்து விதிகளை மீறி, லோடு வேனில் ஆட்களை அழைத்து வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று பாதயாத்திரையை தொடங்கி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுைகயில், ‘கலசபாக்கம் தொகுதியில் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தொகுதியில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவன் பக்தி உள்ளவர்கள் மட்டுமே பர்வதமலை ஏறிச் செல்ல முடியும். தென் கைலாயம் என அழைக்கப்படும் பர்வத மலைக்கு சென்றால் தென் கைலாயம் செல்வதற்கு சமம்’ என்றார். தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தொடங்கி, கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

The post அண்ணாமலை பாதயாத்திரைக்கு லோடு வேனில் அழைத்து வரப்பட்ட ஆட்கள் திருவண்ணாமலையில் ஆபத்தான முறையில் appeared first on Dinakaran.

Related Stories: