கூட்டணி பேச யாரும் வராத நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

திருமலை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்றார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர். அதற்கு அப்படி எதுவும் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ளவைதான் கடைபிடிக்கப்படுகிறது. புதிதாக எதுவும் இல்லை என்றார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேட்டபோது, அதிமுகவில் கூட்டணி குறித்து பேச 4 குழுக்களை அமைத்துள்ளோம். அவர்கள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, தனது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்திவரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவுடன் தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதனால் இபிஎஸ் கடும் அப்செட்டில் உள்ளதாகவும், இதனால் அவர் திருமலைக்கு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

The post கூட்டணி பேச யாரும் வராத நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: