ஸ்பெயின் நாட்டில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தவுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்பட்டார். இந்நிலையில், 8 நாள் அரசுமுறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ஸ்பெயினில் பல்வேறு முதலீட்டாளர்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பதோடு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

 

The post ஸ்பெயின் நாட்டில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: