* சண்டிகர் அணியுடன் கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 293 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. சண்டிகர் 111 மற்றும் 206; தமிழ்நாடு 610/4 டிக்ளேர். சண்டிகர் 2வது இன்னிங்சில் தமிழக தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட், அஜித் ராம் 3, சந்தீப் வாரியர் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன்: நாராயன் ஜெகதீசன் (321 ரன்). சி பிரிவில் தமிழ்நாடு அணி 4 போட்டியில் 2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. குஜராத் (13), ரயில்வேஸ் (12) அடுத்த இடங்களில் உள்ளன.
* புதுச்சேரி அணியுடன் நடந்த ரஞ்சி எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 319 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மத்திய பிரதேசம் 238 மற்றும் 289; புதுச்சேரி 100 மற்றும் 108.
* தென் ஆப்ரிக்காவில் நடக்கும் யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவில் இந்தியா யு-19 அணி நேற்று அமெரிக்கா யு-19 அணியை எளிதாக வீழ்த்தியது. தொடர்ச்சியாக 3 லீக் போட்டியிலும் வென்ற இந்தியா யு-19 அணி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. வங்கதேசம் (4 புள்ளி) 2வது இடத்தையும், அயர்லாந்து (2 புள்ளி) 3வது இடத்தையும் பிடித்தன. அமெரிக்கா ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
* நிர்வாகத்தில் அரசு தலையீடு காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடை நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அறிவித்துள்ளது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.