கோயில் இடத்தில் கட்டியதால் 150 குடிசை வீடுகள் தரைமட்டம்: குஜராத் அரசு அதிரடி

கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் வீரவல் நகரில் அமைந்துள்ள சோம்நாத் கோயிலின் பின்புறம் உள்ள கோயிலுக்கு சொந்தமான சுமார் 7.4 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அரசின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும்பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுமார் 100 வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து கோயில் இடத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 21 வீடுகள் மற்றும் 153 குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட 7.4 ஏக்கர் இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டது.

The post கோயில் இடத்தில் கட்டியதால் 150 குடிசை வீடுகள் தரைமட்டம்: குஜராத் அரசு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: