எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை 36வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் சார்ந்த 29,685 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் 73 பேருக்கு தங்கப்பதக்கம், 21 பேருக்கு வெள்ளிப்பதக்கம், 37 பேருக்கு அறக்கட்டளை சான்றிதழ்கள் மற்றும் பல்கலை சார்பிலான பதக்கங்கள் 48 என மொத்தம் 179 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி மாணவி சிந்து அதிகபட்சமாக 10 பதக்கங்களை பெற்றார்.

The post எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: