விசிக மாநாடு வெற்றிபெற நினைவுத்தூண், கல்வெட்டு திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

 

திருக்கழுக்குன்றம், ஜன.26: விசிக வெல்லும் சனநாயக மாநாடு வெற்றிபெற நினைவுத்தூண் மற்றும் கல்வெட்டு திறக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டையொட்டி, மாநாடு வெற்றி பெற விசிக மற்றும் கலங்கரை விளக்கம் மக்கள் சேவை மையம் சார்பில் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் இசிஆர் சந்திப்பு அருகில் தீபச் சுடர் ஏந்திய நினைவுத் தூண் கல்வெட்டு திறப்பு விழா மற்றும் அம்பேத்கர் நூலகம் மற்றும் திருமா பயிலகம் அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு செங்கை, காஞ்சி மண்டலச் செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை தாங்கினார்.

தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் நத்தமேடு ஏழுமலை, புரட்சி லோகேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், ராஜ்குமார், தேவ அருள் பிரகாசம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தடா தமிழினியன், ஒன்றியச் செயலாளர் திருமணி சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு நினைவுத்தூண் மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்து, நூலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். முடிவில் வெங்கம்பாக்கம் பிரகாஷ் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவின் போது 1,000க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

The post விசிக மாநாடு வெற்றிபெற நினைவுத்தூண், கல்வெட்டு திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: