மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயர் அலுவல் தூதுக்குழுவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்பாக ஆலோசனை

சென்னை: மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயர் அலுவல் தூதுக்குழுவினர் இன்று இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்பாக இன்று (25.01.2024) சந்தித்து கலந்துரையாடினர். இந்த உயர்நிலை அலுவல் பிரதிநிதிகள் குழுவில் மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாண்புமிகு ரீட்டா சஃபியோட்டி பஸ் MLA துணை முதல்வர், பொருளாளர். போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் எம்எல்ஏ எம்பிபிஎஸ்; FRACGP முதல்வரின் பாராளுமன்ற செயலாளர், மாநில தொழில் வளர்ச்சி, வேலைகள் மற்றும் வர்த்தக அமைச்சர், பொதுத்துறை மேலாண்மை, கூட்டாட்சி-மாநில உறவுகள் திரு. ராபி வில்லியம்சன், துணை முதல்வரின் மூத்த ஆலோசகர் மேற்கு ஆஸ்திரேலியா அரசின் பிரிதிநிதி, திருமதி நஷித் சௌத்ரி, முதலீடு மற்றும் வர்த்தக ஆணையர், இந்தியா-வளைகுடா முதலீடு மற்றும் வர்த்தகம், மேற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா அரசின் பிரதிநிதி கிளியோனா ஜேம்ஸ், இயக்குனர், இந்தியா-வளைகுடா, மேற்கு ஆஸ்திரேலியா முதலீடு மற்றும் வர்த்தகம், மேற்கு ஆஸ்திரேலியா அரசின் பிரதிநிதி திருமதி. சுவாதி பாலசுப்ரமணியன், வர்த்தக மேம்பாட்டு மேலாளர், முதலீடு மற்றும் வர்த்தகம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து செயலாற்றுவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வதே சந்திப்பின் நோக்கமாக இருந்தது. பயிற்சி, மதிப்பீடு மற்றும் சான்றளிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, ஆசிரியர்களுக்கான விரிவான பயிற்சிகளை கூட்டாக நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடலில் ஆராயப்பட்டன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடனான நெருங்கிய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களுக்கு வளர்ந்து வரும் திறன் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க பயிற்றுநர்களை தயார் செய்யும் திட்டங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதை செயல்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் வண்ணம் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய இரண்டு தரப்பிலும் தொழிற்கல்விக்கான வலுவான கட்டமைப்பை வடிவமைப்பதில் உறுதியுடன் இருக்கும். இது இன்றைய மாறிவரும் வேலைவாய்ப்பு சந்தையில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களைக் கொண்ட தனிநபர்களை மேம்படுத்துவதற்கான கூட்டு நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

The post மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயர் அலுவல் தூதுக்குழுவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்பாக ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: