பயிர் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து நெல் தரிசு சாகுபடிக்கு ஏற்ற புதிய ரகங்கள்

நீடாமங்கலம்: பயிர் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து நெல் தரிசு சாகுபடிக்கு ஏற்ற புதிய ரகங்கள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி அருள்செல்வி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் தரிசுப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களில் எக்டேருக்கு மிகவும் குறைவாக விளைச்சல் பெறப்படுகிறது. அவைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் புதிய சாகுபடி முறைகளை கவனத்துடன் கடைபிடித்தால் இப்பயிர்களில் அதிக விளைச்சல் பெறலாம். இதற்காக உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்கள், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை பற்றி ஆராய்ந்து நெல் தரிசு சாகுபடிக்கென்றே பல புதிய ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

 

The post பயிர் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து நெல் தரிசு சாகுபடிக்கு ஏற்ற புதிய ரகங்கள் appeared first on Dinakaran.

Related Stories: