பட்டாம்பி அருகே குளங்கரை பகவதி அம்மன் கோயிலில் தாலப்பொலி திருவிழா

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை அடுத்த குளங்கரை பகவதி அம்மன் கோயிலில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. ஆண்டுந்தோறும் இக்கோவிலில் தாலப்பொலி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் திருவிழா நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் துவங்கின, நாளை வரை மூன்று நாட்கள் விழா தொடர்ந்து விஷேச பூஜைகளுடன் நடைபெற உள்ளன.

நேற்று முன்தினம் இக்கோவில் கணபதி ஹோமத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள்,உச்சிக்கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்ய மேளத்தாளத்துடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விஷேச நிகழ்ச்சியில் பல்வேறு வேடங்கள் தரித்த கலைஞர்கள் மேளத்தாளத்துடன் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அம்மன் திருவீதியுலா யானை மீது பஞ்சவாத்யத்துடன் நடைபெற்றது. பட்டாம்பி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கோவில் மைதானத்தில் திரளாக திரண்டிருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் திருவீதியுலாவில் கேளி,தையம்,கரிங்காளி,சிங்காரிமேளம்,காவடியாட்டம் என வேடங்களின் நடனங்கள் இடம்பெற்றிருந்தன.

The post பட்டாம்பி அருகே குளங்கரை பகவதி அம்மன் கோயிலில் தாலப்பொலி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: