அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. முதல் நாளிலே அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: காவல்துறையினர் திணறல்!!

அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரை தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு இருக்கிறது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பிஷேகம் நேற்று நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார்.

மேலும், ராமர் கோவில் கும்பிஷேகம் விழாவில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கவர்னர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் ராமர் அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், ராமரை இன்றும் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் பகவான் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர்.

இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வரத் தொடங்கினர். காலை 6.30 மணி தீபாராதனையை காண பக்தர்கள் ஆர்வமாக வந்துள்ளனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரக்ள்.

The post அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. முதல் நாளிலே அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: காவல்துறையினர் திணறல்!! appeared first on Dinakaran.

Related Stories: