அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை நிறைவு: பாலராமர் சிலைக்கு தாமரை மலரால் பூஜித்த பிரதமர் மோடி

அயோத்தி: அயோத்தி ராமர்கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல், கட்சி தலைவர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவால் அயோத்தி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது. அயோத்தியில் மூலவரான குழந்தை ராமரின் 51 அங்குல சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டது.

அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு முதல் பூஜையை பிரதமர் செய்தார். குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் மலர் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டன.

The post அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை நிறைவு: பாலராமர் சிலைக்கு தாமரை மலரால் பூஜித்த பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: