அரசு கல்லூரி கருத்தரங்கம் கலெக்டர் பங்கேற்பு

காரைக்குடி, ஜன. 21:காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் புவியமைப்பியல் துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் தேசிய நீரியல் நிறுவனம் சார்பில் சிவகங்கை மாவட்டம் சார்ந்த அடிப்படை நீரியல் மற்றும் நீர்நிலை மேலாண்மை தொடர்பாக கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை வகித்தார். புவியமைப்பியல் துறைத்தலைவர், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் உதயகணேசன் வரவேற்றார். கலெக்டர் அஷாஅஜித் கருத்தரங்கை துவக்கிவைத்து பேசுகையில், ‘’கல்வி நிறுவனங்களும் அரசு துறைகளும் இணைந்து மாவட்டத்தின் நீர் ஆதாரங்களை பெருக்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்றார். கனடா கோல்மர் தங்க சுரங்க சேர்மன், முன்னாள் மாணவர் சேதுராமன், பேராசிரியர் மாணிக்கவாசகம், தேசிய நீர்நிலை நிறுவன விஞ்ஞானிகள் செந்தில்குமார், மனிஷ்கே நீமா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

The post அரசு கல்லூரி கருத்தரங்கம் கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: