ரேஸ்கோர்ஸில் இன்று போட்டிகள் துவக்கம் தமிழ்நாடு கட்கா அணி தீவிர பயிற்சி

மதுரை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் அசாம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட 36 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் வந்த கட்கா உபகரணங்களான வாள், கேடயம் மற்றும் மார்பு கவசம் ஆகியவை வீரர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு கட்கா அணியினர் நேற்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கட்கா போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று காலை 9 மணிக்கு துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புதிய விதிமுறை: கட்கா சங்க செயலாளரும் பயிற்சியாளருமான செல்வராஜ் கூறுகையில், ‘கட்கா போட்டி ஒரு வளையத்திற்குள் நின்று விளையாட வேண்டும். வளையத்தை விட்டு வெளியில் சென்றால் தகுதிநீக்கம் செய்யும் விதிமுறை இருந்தது. அதில் தற்போது திருத்தம் கொண்டு வந்துள்ளனர். வளையத்தை விட்டு வீரர் வெளியில் சென்றால் தகுதிநீக்கத்திற்கு பதிலாக ஒரு புள்ளி குறைக்கப்படும்’ என்றார்.

The post ரேஸ்கோர்ஸில் இன்று போட்டிகள் துவக்கம் தமிழ்நாடு கட்கா அணி தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: