புத்தக திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

 

ராமநாதபுரம், ஜன. 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது புத்தக திருவிழா பிப்ரவரி 2ந் தேதி தொடங்க உள்ளதையொட்டி நேற்று ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முகவை சங்கமம் 6வது புத்தகத் திருவிழா ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 2ந் தேதி தொடங்கும் புத்தகத் திருவிழா பிப்ரவரி 12ம் தேதி முடிய நடைபெறுகிறது. இதில் முன்னனி புத்தக பதிப்பகங்கள் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சிகள் வைக்கப்பட உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரங்கங்களும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சிப்பட்டறை, ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி நடைபெறுகிறது. மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆளுமைகளின் கருத்தரங்கம் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

எனவே மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முகம்மது, சேதுபதி மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, ஒருங்கிணைப்பாளர், பிரவீன்குமார், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புத்தக திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: