ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு..!!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2014ல் பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். இது சாத்தியம் அல்ல என்று அக்கருத்து புறந்தள்ளப்பட்டு வந்தது. எனினும் இதை சாத்தியமாக்க பிரதமர் மோடியின் அரசு தற்போது தயாராகி வருகிறது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் வரும் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும் இதை ஒரே சமயத்தில் அமலாக்குவது சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஏனெனில், ஒரே சமயத்தில் அமலாக்க வேண்டுமானால், நாடு முழுவதிலும் ஐந்து வருட ஆட்சிக்காலத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட வேண்டும். இதில், அவை அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் முடிந்துள்ளன என்பதை கணக்கில் கொள்ள முடியாது. இதுபோல் செய்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது.

மாறாக, இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு கட்சிகள் உயர்நிலைக் குழுவுக்கு கடிதம் அனுப்பிவருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான உயர்நிலைக் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான குழுவை கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: