ஈரோட்டில் ரயில் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

 

ஈரோடு, ஜன.19: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் (லோகோ பைலட்) சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். தென் மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணை செயலாளர் சுனிஸ் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். வார ஓய்வு 40 மணி நேரமாக வழங்க வேண்டும்.

தொடர் இரவு பணியை இரண்டாக குறைக்க வேண்டும். சரக்கு ரயில் ஓட்டுநர்களை 48 மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிளை துணை செயலாளர் சினோஜ், கிளை தலைவர் அருண் உட்பட ரயில்வே ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் ரயில் ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: