நத்தம் சமுத்திராபட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு

நத்தம், ஜன. 19: நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுபாஷினி, தீபக், தனபால், ஜனகராஜ், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தேசிய அளவில் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். அவர்களை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், நகர அவை தலைவர் சரவணன், வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, தெற்கு ஒன்றிய அவை தலைவர் கணேசன், நிர்வாகிகள் பொறியாளர் மணி, ரஷப்தீன் உள்ளிட்டோர் பாராட்டி கவுரவித்தனர்.

மேலும் மாணவர்களக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பாராட்டினர். முன்னதாக நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, விளையாட்டு போட்டிகளில் தேர்வான மாணவர்கள் மென்மேலும் பயிற்சி பெற்று வெற்றி பெறவும், கல்வி பயிலவும் உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விளையாட்டு, நடனம் போன்றவை நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சமுத்திராபட்டி கிளை நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

The post நத்தம் சமுத்திராபட்டி அரசு பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: