குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 

தஞ்சாவூர், ஜன.19: குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ராவுத்தன்வயல் ஊராட்சி சேர்த்த சம்பைப்பட்டினத்தில் மைய்யவாடி பகுதியில சுமார் 500 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் வீடுகள் உள்ள பகுதியில் ஊராட்சி கழிவு குப்பைகளை கொட்டி குப்பைகள் கிடங்காக மாறிவருகிறது. இது குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் இங்கே குப்பைகள் கொட்ட கூடாது, ஊருக்கு ஒதுக்குப் புறங்களில் பொது மக்கள் குடியிருப்புகள் இல்லாத இடங்களில் குப்பைகள் கொட்டுங்கள் என தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இங்கு குப்பைகளை கொட்டி குப்பைகள் கிடங்காக மாற்றி வருவது மிகவும் இடையூறாக உள்ளது. டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பகல் இரவு நேரங்களில் வீட்டில் இருக்க முடியவில்லை. மேலும் தூங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறோம். குழந்தைகள் வயதானவர் அடிக்கடி நோய் ஏற்பாடு மருந்துவமனைக்கு செல்கிறார்கள். எனவே இப்பகுதி பொது மக்கள் நலன் கருதி உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரகேடு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: