மாரியம்மன் கோயில் திருவிழா பெரியதள்ளப்பாடியில் எருதாட்ட விழா

ஊத்தங்கரை, ஜன.19: ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பாரம்பரிய எருதாட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் எருதாட்ட கயிற்றை மாரியம்மன் கோயில் வளாகத்திற்கு எடுத்து வந்து சிறிய கன்று, முதல் பெரிய காளைகள் மற்றும் நாட்டு மாடுகள் ஆகியவற்றை ஊர்வலமாக அழைத்து வந்து, கோயிலின் முன்பாக உள்ள பிரகாரத்தில் உள்ள சிலை முன்பாக நிறுத்தி, சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அழிந்து வரும் நாட்டு மாடுகள் காக்கவேண்டும் என கூறி, எருதாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்த எருதாட்ட நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களின் இருந்து வந்திருந்தனர். சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரிசையாக காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகள் மற்றும் அதனை துரத்திச்சென்ற வீரர்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

The post மாரியம்மன் கோயில் திருவிழா பெரியதள்ளப்பாடியில் எருதாட்ட விழா appeared first on Dinakaran.

Related Stories: