ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பின் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு: குமாரசாமி தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் மஜத மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அவரது மகனும் மாநில இளைஞரணி தலைவருமான நிகில் குமாரசாமி மற்றும் முன்னாள் எம்.பி குபேந்திரா ரெட்டி ஆகிய மூவரும் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து தெரிவித்த குமாரசாமி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். மாநில அரசியல், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து ஆலோசித்தோம். பாஜ – மஜத அதிகாரப்பூர்வ கூட்டணி செயல்முறை குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் பேசி முடிவெடுப்பதாக அமித்ஷா தெரிவித்தார். அப்போது ஜே.பி.நட்டாவும் உடனிருந்தார் என்றார்.

The post ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பின் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு: குமாரசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: