மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ரிட் மனு

புதுடெல்லி: மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு வரும் 24ம் தேதி வரையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு பதியப்பட்டது. அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் அமலாகத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அங்கீத் திவாரியை எங்களது துறை ரீதியிலான கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்த அனுமதியை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ரிட் மனு appeared first on Dinakaran.

Related Stories: