ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார்த்திக், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கருப்பாயூரணி கார்த்திக் என முதலிடம் பிடித்த மூன்று வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற வீரர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை அரசு இந்த ஆண்டிலாவது பரிசீலிக்க வேண்டும். காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் 373வது தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்துகிறேன். எனவே, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை உலகம் முழுவதும் பறைசாற்றும் இவ்வேளையில், அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசுப் பணி வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்க வேண்டும்.

The post ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: