சுவிச்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மையத்தில் தமிழ்நாட்டின் அரங்கு திறப்பு!

சுவிச்சர்லாந்து: சுவிச்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மையத்தில் தமிழ்நாட்டின் அரங்கு திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில், மனிதவளம் மற்றும் முதலீடுகளுக்கான சூழலை சர்வதேச நாடுகள் அறிந்துகொள்ளும் விதமாக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தில், தமிழ்நாடு பெவிலியனை தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.

இந்த உலகப் பொருளாதார மாநாடு ஜனவரி 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழுவினர் சுவிட்சர்லாந்து சென்று உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 3வது ஆண்டாக உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழ்நாடு அரசு பங்கேற்கிறது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், அமேசான் காடுகள் பாதுகாப்பு, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படவுள்ளது.

 

The post சுவிச்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார மையத்தில் தமிழ்நாட்டின் அரங்கு திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: