போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்தில் கடும் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன.

இதனை அடுத்து சென்னையில் பனி மூட்டத்துடன், புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. கடும் புகையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரி இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு சென்றது. தொடர்ந்து லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

சென்னை புகை மூட்டத்தால் மும்பை, டெல்லி, மஸ்கட், விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருக்கின்றன. சென்னையில் இருந்து அந்தமான், புனே, மும்பை, டெல்லி, தூத்துக்குடி, ஐதராபாத், மதுரை செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பாடு தாமதம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருகின்றனர்.

The post போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: