கல்லூரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான நெட்பால் போட்டி: ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்

 

திருச்சி, ஜன.14: திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்ற நெட்பால் போட்டி நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான நெட்பால் போட்டி நாக்-அவுட் முறையில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

7 கல்லூரி அணிகள் பங்கேற்ற நெட்பால் போட்டியின் இறுதி போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, திருவாரூர் மஞ்சக்குட சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 40-33 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான நெட்பால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது. தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணியை 17-15 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான நெட்பால் போட்டி: ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: