தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 நாட்கள் சென்னையில் 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (13.1.2024) சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் – நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர், லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 14.1.2024 முதல் 17.1.2024 வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில். செவ்வியல் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு. காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: