கார் விபத்து மெகபூபா முக்தி தப்பினார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கானாபால் பகுதியில் கடந்த இருதினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடுகளை இழந்தவர்களை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முக்தி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.

சங்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மெகபூபா முக்தி எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கார் ஓட்டுநரும், பாதுகாவலர் ஒருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து வேறொரு காரில் கானாபால் பகுதிக்கு மெகபூபா புறப்பட்டு சென்றார்.

The post கார் விபத்து மெகபூபா முக்தி தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: