தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் எடியூரப்பா சாமி தரிசனம்

தென்கனரா: தென்கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலுக்கு முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நேற்று காலை வருகை தந்தார். அவரை கோயில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே வரவேற்று மஞ்சுநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார் தரிசித்த பின்னர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, பல வருடங்களுக்கு பிறகு தர்மஸ்தலா பகுதிக்கு நண்பர்களுடன் வந்தேன்.

தற்போது மழை குறைந்து வறட்சி நிலவுகிறது. ஊரில் மழைபெய்து, வளம் வரவேண்டும் என மஞ்சுநாதரிடம் பிரார்த்தனை செய்தேன் என்றார். இந்நிகழ்ச்சியில் பெல்தங்கடி எம்எல்ஏ ஹரீஷ் பூஞ்சா, பெல்தங்கடி பாஜ மண்டல தலைவர் ஸ்ரீனிவாஸ் ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். துலாபார சேவை இதைத் தொடர்ந்து, குக்கே சுப்ரமணியரை தரிசித்த எடியூரப்பா, சிறப்பு பூஜை செய்து, காசுகளுடன் துலாபார சேவை செய்தார்.

The post தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் எடியூரப்பா சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: