சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2024முதல் 10.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 11 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 08 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 02 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, என மொத்தம் 22 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில் கடந்த 04.01.2024 முதல் 10.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1.சண்முகம் (எ) சண்முகநாதன், வ/28, த/பெ.நாராயணன், தண்டையார்பேட்டை, சென்னை மற்றும் 2.அரிதாஸ் (எ) அரி, வ/23, த/பெ.குமார், தண்டையார்பேட்டை, சென்னை ஆகிய இருவரும் கடந்த 10.12.2023 அன்று, முத்துபாண்டி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும், 3.சிவசுப்ரமணியன், வ/34, த/பெ.நீலஒளி, பொன்னான்திட்டு, கிள்ளை, கடலூர் மாவட்டம் என்பவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உதவியாளர் போல பேசி மிரட்டிய குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவிலும், 4.கோவிந்தராஜ் (எ) மனோஜ் (எ) கும்கி மனோஜ், வ/23, த/பெ.சரவணன், பாலவாக்கம், சென்னை என்பவர் கடந்த 19.12.2023 அன்று பிரேம்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, G-2 பெரியமேடு காவல் நிலையத்திலும், 5.அஸ்வின்,வ/29, த/பெ.காமராஜ், ஈஞ்சம்பாக்கம், சென்னை என்பவர் கடந்த 09.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக J-8 நீலாங்கரை காவல் நிலையத்திலும், 6.பாலமுருகன், வ/33, த/பெ.ஜெயகிருஷ்ணன், தி.நகர். சென்னை என்பவர் கடந்த 15.12.2023 அன்று குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக J-7 வேளச்சேரி காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும்,7.பாலாஜி, வ/33, த/பெ.குமார், சூளை, சென்னை, 8.எபினேசர், வ/28, த/பெ.பாலு, திருமங்கலம், சென்னை, 9.அய்யப்பன், வ/37, த/பெ.மணி, அம்பத்துர், சென்னை, 10.மணிகண்டன், வ/30, த/பெ.பக்கிரி, சூளை, சென்னை 11.வினோத்ராஜா (எ) சென்ட்ரல் ராஜா, வ/37, த/பெ.முருகேசன், பள்ளிகரணை, சென்னை ஆகிய 5 நபர்களும் கடந்த 20.12.2023 அன்று திருநங்கைகளிடம் தங்க செயின் மற்றும் செல்போன்கள் பறித்து சென்ற குற்றத்திற்காக, T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும்,12.கார்த்திகேயன் (எ) கார்த்திக் (எ) துப்பாக்கி கார்த்திக், வ/44, த/பெ.வெங்கடேசன், கொலப்பாக்கம், சென்னை என்பவர் கடந்த 22.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும், 13.ராஜி (எ) குள்ள ராஜி, வ/32, த/பெ.மோகன், கோடம்பாக்கம், சென்னை என்பவர் கடந்த 18.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும்,14.ரமேஷ்குமார், வ/26, த/பெ.கந்தன், தி.நகர், சென்னை மற்றும் 15.ஆனந்தராஜ், வ/32, த/பெ.குமார், தி.நகர், சென்னை ஆகிய இருவரும் கடந்த 23.12.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, R-1 மாம்பலம் காவல் நிலையத்திலும், 16.அமுலு, பெ/வ-36, க/பெ.அலெக்ஸ், பூக்கடை, சென்னை என்பவர் கடந்த அன்று புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக C-1 பூக்கடை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் சண்முகம் (எ) சண்முகநாதன், அரிதாஸ் (எ) அரி, சிவசுப்ரமணியன், கோவிந்தராஜ் (எ) மனோஜ் (எ) கும்கி மனோஜ், அஸ்வின், பாலமுருகன் ஆகிய 6 நபர்களை கடந்த 04.01.2024 அன்றும், பாலாஜி, எபினேசர், அய்யப்பன், மணிகண்டன், வினோத்ராஜா (எ) சென்ட்ரல் ராஜா ஆகிய 5 நபர்களை கடந்த 06.01.2024 அன்றும், கார்த்திகேயன் (எ) கார்த்திக் (எ) துப்பாக்கி கார்த்திக், ராஜி (எ) குள்ள ராஜி ஆகிய 2 நபர்களை கடந்த 08.01.2024 அன்றும், ரமேஷ்குமார், ஆனந்தராஜ், அமுலு ஆகிய 3 நபர்களை கடந்த 09.01.2024 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 16 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 16 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: