தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ₹1,000, பொங்கல் தொகுப்பு வேட்டி, சேலை வழங்கும் பணி: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவள்ளூர், ஜன. 11: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை 2024ஐ சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ₹1000 ரொக்கம் மற்றும் 1 முழு கரும்பு, 1 வேட்டி, 1 சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஆணையிட்டு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆர்.கே.பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தியும், காக்களூர் ஊராட்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவும் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ₹1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள 1,139 நியாயவிலைக் கடைகள் மூலம், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 6,25,729 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கருணாகரன், வட்டாட்சியர் விஜயகுமார், திமுக ஒன்றிய செயலாளர் பழனி, சண்முகம், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், முன்னால் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, சம்பத், ரகு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்தியராஜ், ஆனந்தி செங்குட்டுவன், மோனிஷா சரவணன், ஆர்.கே.பேட்டை கூட்டுறவு சங்க செயலாளர் ஏழுமலை, மாவட்ட நெசவாளரணி தலைவர் ரவி, நிர்வாகிகள் சுப்பிரமணி, சிங்காரம், நாகப்பன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்களூர் ஊராட்சி, பூங்கா நகர் மற்றும் மபொசி நகரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய அவைத் தலைவருமான எத்திராஜ் முன்னிலை வகித்தனர். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ. 1000 ரொக்கப்பணம் மற்றும் 1 முழு கரும்பு 1 வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட பொது மக்கள் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் த.சுகுமார், சௌந்தர்ராஜன், ஒன்றிய கவுன்சிலர் பூவண்ணன், தியாகராஜன், சிவப்பிரகாசம், சரவணன், செந்தில், முருகன், சதீஷ், பிரபு, சங்கர், கார்த்திக், கதிர், பரத் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ₹1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தலைவர் ஸ்ரீதர், நகர திமுக செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், திருவேற்காடு நகராட்சி பகுதியில் நகர் மன்ற தலைவர் மூர்த்தி தலைமையில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். அப்போது, பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், ‘பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹1000 ரொக்கம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இச்சமயத்தில் இந்த தொகை பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருக்கிறது.’ என்றனர்.

பெரியபாளையம்: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் இளையராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு, பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 3,200 குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000, வேட்டி சேலை, பச்சரிசி, கரும்பு, உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கி சிறப்புரையாற்றினர். இதேபோல் கன்னிகைபேர், திருக்கண்டலம், அழிஞ்சிவாக்கம், அக்கரபாக்கம், அத்தங்கிகாவனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்திவேலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், நிர்வாகிகள் நீதிசெல்வசேகரன், சுரேஷ், வீரமணிகண்டன், மோகன், தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ₹1,000, பொங்கல் தொகுப்பு வேட்டி, சேலை வழங்கும் பணி: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: