சந்திரகிரி பகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி போராட்டம்

திருப்பதி : போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். திருப்பதி மாவட்டம், சந்திரகிரி பகுதியில் அதிக அளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட செயலாளர் நானி தலைமையில், சந்திரகிரி மண்டல அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் நடந்தது. அப்போது, மாவட்ட செயலாளர் பேசுகையில், ‘ஆந்திரா மாநில சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும், ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் பட்டியல் சரி பார்க்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டபோது, ஆளுங்கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இது போன்ற செயலில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ’என பேசினார்.

The post சந்திரகிரி பகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: