தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்!!

டெல்லி : தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு 2023 ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கினார். விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை அண்மையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது.

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியல்

தயான் சந்த் கேல் ரத்னா விருது – பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ்

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது – லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்)

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

அர்ஜுனா விருது : ஓஜஸ் பிரவின் (வில்வித்தை) அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை) முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்) பருல் சவுத்ரி (தடகளம்) முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை) ஆர் வைஷாலி (செஸ்) முகமது ஷமி (கிரிக்கெட்) அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்) திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்) திக்ஷா தாகர் (கோல்ப்) கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி) சுசீலா சானு (ஹாக்கி) பவன் குமார் (கபடி) ரிது நேகி (கபடி) நஸ்ரீன் (கோ-கோ) பிங்கி (புல்வெளி பந்துகள்) ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு) இஷா சிங் (துப்பாக்கி சூடு) ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்) அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்) சுனில் குமார் (மல்யுத்தம்) ஆன்டிம் (மல்யுத்தம்) ரோஷிபினா தேவி ( வுஷு) ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை) இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்) பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

The post தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்!! appeared first on Dinakaran.

Related Stories: