போராட்டத்தில் மாரடைப்பு கம்யூ. நிர்வாகி சுருண்டு பலி

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மழை -வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி, மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும், பென்னாகரம் நகர செயலாளருமான விஜயபாரதி (49) தலைமை வகித்து பேசினார். அப்போது, மேடையில் பேசிக்கொண்டிருந்த விஜயபாரதி, திடீரென மயங்கி சரிந்தார். உடனே, அவரை கட்சியினர் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் விஜயபாரதி உயிரிழந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த விஜயபாரதிக்கு காந்திமதி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

The post போராட்டத்தில் மாரடைப்பு கம்யூ. நிர்வாகி சுருண்டு பலி appeared first on Dinakaran.

Related Stories: