தமிழ்நாடு 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது சாத்தியம்: ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது சாத்தியம். இது ஒரு முற்போக்கான இலக்கு என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு என்னுடைய சொந்த மாநிலம், சொந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி. 1 டிரில்லியன் பொருளாதாரம் என்பது முற்போக்கான இலக்கு, அந்த இலக்கை அடைய வேண்டுமானால் மாநிலம் வளர்ச்சி அடைவதோடு, முதலீடுகளை அதிகரித்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது சாத்தியம். அதேபோல், இந்தியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முதலீடுகள் அதிகளவில் வந்துக்கொண்டு இருக்கிறது, இந்திய பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளதால் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வர வாய்ப்புள்ளது. தற்போது தகவல் தொழில்நுட்ப முதலீடுகள் அதிகமாக வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது சாத்தியம்: ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: