ஒருவாரத்திற்கு முன்பு விண்ணப்பித்தும் ராகுல் யாத்திரைக்கு அனுமதி தாமதம்: காலம்தாழ்த்தும் மணிப்பூர் அரசு

இம்பால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜன.14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் முதல் மார்ச் 20ம் தேதி மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நடத்த உள்ளார். இதுபற்றி மணிப்பூர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில்,’ ராகுல்காந்தி யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மணிப்பூர் அரசின் தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷியை சந்தித்து ஜனவரி 2ம் தேதி கடிதம் வழங்கினோம். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹப்தா கங்ஜெய்புங்கில் யாத்திரை தொடங்கப்பட உள்ளது.

ஆனால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், தலைமைச் செயலாளரை சந்தித்தோம். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் இருக்காது என்று நம்புகிறோம்’ என்றார். அசாம் மாநிலத்தில் 15 கட்சிகள் ஆதரவு: ராகுல்காந்தி யாத்திரை அசாம் மாநிலத்தில் ஜன.18 முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த யாத்திரைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் உள்பட 15 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

The post ஒருவாரத்திற்கு முன்பு விண்ணப்பித்தும் ராகுல் யாத்திரைக்கு அனுமதி தாமதம்: காலம்தாழ்த்தும் மணிப்பூர் அரசு appeared first on Dinakaran.

Related Stories: