நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என நிர்வாகிகள் பேட்டி… நாளை பேருந்துகள் இயக்க நடவடிக்கை என அமைச்சர் சிவசங்கர் உறுதி!!

சென்னை : தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனே முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன்,” ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் மீது தற்போது எதுவும் முடிவெடுக்க முடியாது என அரசு தரப்பு கூறிவிட்டது. 6 அம்ச கோரிக்கைகளில் எதன் மீதும் தற்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பு தெரிவித்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பொங்கலுக்குப் பின் பேசிக் கொள்ளலாம் என அரசு கூறியது. ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பரிசீலிக்கலாம், ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே பரிசீலிக்க கோரினோம். அமைச்சர் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது. தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.வேலைநிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.,”இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணா தொழிற்சங்கம் கமலக்கண்ணன்,”போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும். அரசு பேருந்துகளின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்படும். கோரிக்கைகளை ஏற்க அரசு தரப்பு மறுப்பு தெரிவித்தது,”என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொ.மு.ச. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் நாளை பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் 2 கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்துவிட்டோம்.பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கை குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை தற்போதுள்ள சூழலில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது,” இவ்வாறு தெரிவித்தார்.

The post நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என நிர்வாகிகள் பேட்டி… நாளை பேருந்துகள் இயக்க நடவடிக்கை என அமைச்சர் சிவசங்கர் உறுதி!! appeared first on Dinakaran.

Related Stories: